பருத்தி வீரன் பற்றி இன்னும் பேசுகிறார்கள்: கார்த்தி நெகிழ்ச்சி
ADDED : 1485 days ago
கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவுடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். தேனி சுற்று வட்டாரப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வருகிறது. விருமன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுரைக்கு வந்துள்ளேன். பருத்திவீரன் படத்தைப் பற்றி இங்குள்ள மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் அரவணைப்பும் அன்பும் மாறாமல் உள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறேன்! என்று தெரிவித்துள்ளார்.