மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1411 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1411 days ago
1990களில் இளைஞர்கள், இளம் பெண்களை கவர்ந்த காதல் நாயகனாக வலம் வந்த நடிகரான அப்பாஸ், “காதல் தேசம்” உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் ஒரு கட்டத்துக்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
ரசிகர் ஒருவர், அப்பாஸ் எப்போதும் சமூக வலைத்தளத்தில் இருப்பது பற்றி கேட்டதற்கு, “நான் இந்தியாவில் தான் இருக்கிறேன் என்று அர்த்தமில்லை. எந்த நாட்டில் எந்த நேர சூழ்நிலையில் இருப்பேன் என்பது எனக்கு தெரியும். அதற்கான காரியம் காரணம் உள்ளிட்டவற்றை நானறிவேன். அதைப்பற்றிய விமர்சனத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது நான் படம் பண்ணுவதில்லை. நல்ல கதை என் மனதுக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக பண்ணுவேன். ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆர்வமில்லை. தினமும் எளிமையான சின்ன சின்ன பிரச்சினைகள் மண்டைக்குள் வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் இருந்து நிறைய இடங்களுக்கு பிரிந்து சென்று இருக்கிறார்கள். ஒரு குடும்பம் சேர்ந்து எப்படி இருக்கலாம் என்பது குறித்து ஆசைகள் நிறைய இருக்கிறது. இளைஞர்கள், உழைக்கும் மக்கள், வேலையில் இருப்பவர்கள் பலருக்கும் தற்கொலை எண்ணம் மேலிடும்.
நானும் டீன்-ஏஜ் வயதில் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டேன். அந்த நிலையில், என்னுடைய உயிரை விடாமல் வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறேன். என் வாழ்க்கை அனுபவம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றினால் எனக்கு மிகப்பெரிய வெற்றி அல்லது விருது என்று சொல்வேன். என்னுடைய நோக்கம் அப்படியான உதவியை நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இதற்கெல்லாம் ஊக்கமும் வரவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களை கொடுக்க முடியும். அதற்கு உங்களுடைய சப்போர்ட் தேவை. என்ஜாய். நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1411 days ago
1411 days ago