கமலின் விக்ரம் படத்தில் இணைந்த ஐந்தாவது மலையாள நடிகர்
ADDED : 1440 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் அவருடன் விஜயசேதுபதி, பகத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் செம்பன் வினோத் என்பவரும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா-2 படத்தில் நடத்திருக்கிறார். அந்தவகையில், கமலின் விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்க்கீஸ் என நான்கு மலையாள நடிகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது ஐந்தாவதாக செம்பன் வினோத் இணைந்திருக்கிறார்.