சமூகக்கருத்தை சொல்லும் கொடியன்
ADDED : 1480 days ago
டோனிசான் இயக்கியுள்ள படம் கொடியன். மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றி இப்படம் பேசுகிறது. வழக்கமான த்ரில்லர் பார்முலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்திருக்கிறோம், அது படம் வெளியாகும் போது மட்டுமே தெரியும்' என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
நிவாஸ் ஆதித்தன், நித்யஸ்ரீ ஜோடியாக நடித்துள்ளனர். கேபர் வாசுகி இசையமைக்க, பின்னணி இசையை கிரிநந்த் - விஜய் கார்த்திகேயன் செய்திருக்கிறார்கள். விரைவில் தியேட்டரில் வெளியாகவிருக்கும் கொடியன் படம் பல சர்வதேச விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.