மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1410 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1410 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1410 days ago
துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து மிஷ்கின் - விஷால் கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் உருவானது. லண்டனில் படம் வளர்ந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு மிஷ்கின் விலகினார். இயக்குனர் பொறுப்பை ஏற்ற விஷால் அப்படியே இந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் விஷால் ஒரு பேட்டியில் இனி மிஷ்கின் உடன் படம் பண்ண மாட்டேன். அவர் எனக்கு செய்தது துரோகம் என கூறியிருந்தார்.
இதுப்பற்றி மிஷ்கினை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛இந்த பிரச்னையை அப்படியே விடலாம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் பேசி பேசியே விஷால் மாட்டிக்கிறார். அவரது பேட்டியை பார்த்தேன் காமெடியாக இருந்தது. என் கதையையே கொடுத்தவன், என் தம்பியை தர மாட்டேனா. என் தம்பி நடித்தால் பணம் வரும், அதை ஏன் நான் தடுக்க வேண்டும். நான் படம் பண்ண மாட்டேன் என்று சொன்னதும் விஷால் தலையில் கையை வைத்தது உண்மை தான். எந்த சூழ்நிலையில் அப்படி சொன்னேன் தெரியுமா. என் உதவியாளர்களை மோசமாக நடத்தி ஊருக்கு அனுப்பி வைத்தனர். பிறகு என் மேலாளரையும் அதேப்போன்று நடத்தி அனுப்பி வைத்தனர். இப்படியே செய்தால் எனக்கு படமே வேண்டாம் என்றேன். உடனே நான் முக்கியமா, உதவியாளர்கள் முக்கியமா என விஷால் கேட்டார். நான் என் உதவியாளர்கள் தான் முக்கியம் என கூறி வந்துவிட்டேன் என்றார்.
மேலும் மிஷ்கினின் மேலாளரும், சித்திரம் பேசுதடி பட தயாரிப்பாளருமான ஸ்ரீகாந்த் கூறும்போது, ‛‛இந்த படத்தில் பிரச்னை எழ காரணமே ரமணா தான். என்னை உட்பட எங்கள் உதவியாளர்களை அவர் அடிக்க வந்ததோடு மோசமாகவும் நடத்தினார். லோகோஷன் தேர்வு உள்ளிட்ட எல்லாவற்றிலும் அவரின் தலையீடு அதிகமாக இருந்தது. ஒருக்கட்டத்தில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் தான் நாங்கள் இந்த படத்தை விட்டு வெளியேறினோம் என்றார்.
1410 days ago
1410 days ago
1410 days ago