உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளராக நிறைய கற்றுக்கொண்டேன் : அமலாபால்

தயாரிப்பாளராக நிறைய கற்றுக்கொண்டேன் : அமலாபால்

நடிகை அமலாபால் தற்போது தமிழில் கடாவர், மலையாளத்தில் ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இதில் கடாவர் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் பிணங்களுக்கு மத்தியில்அமர்ந்து அமலாபால் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்தநிலையில், ஆடை படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனை தரும் என்று நம்பி மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை சந்தித்த அமலாபால், இந்த கடாவர் படம் தன்னை மீண்டும் பரபரப்பான நடிகையாக உயர்த்தும் என்பதோடு, இதன்பிறகு ரசிகர்கள் வேற லெவலில் அமலாபாலை பார்க்கலாம் என்கிறார். அதோடு சினிமாவில் நடிகையாக கற்றுக் கொண்டதை விட ஒரு தயாரிப்பாளராக நிறையவே நான் கற்றுக் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார் அமலாபால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !