உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நண்பர் ரஜினி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் - கமல்

நண்பர் ரஜினி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் - கமல்

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர்
ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் ரஜினி நலமாக உள்ளதாக அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !