உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எப்.ஐ.ஆர் தியேட்டரில் தான் ரிலீஸ் - விஷ்ணு விஷால் உறுதி

எப்.ஐ.ஆர் தியேட்டரில் தான் ரிலீஸ் - விஷ்ணு விஷால் உறுதி

விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2019ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான பர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள விஷ்ணு விஷால், இது தவறான செய்தி. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் எப்போதுமே சொல்வது, இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறோம். திரையரங்கில் படம் பார்த்தால்தான் படம் பார்த்த உணர்வு இருக்கும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !