ரசிகர்களை ஈர்த்த வில்லி நடிகையின் போஸ்ட் வெட்டிங் போட்டோஸ்!
ADDED : 1436 days ago
சின்னத்திரை நடிகையான சுஸ்மா நாயரின் போஸ்ட் வெட்டிங் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி பலரது மனங்களை கவர்ந்துள்ளது.
நாயகி தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார் சுஸ்மா நாயர். இவர் கிரிக்கெட் பயிற்சியாளரான லிஜோ டி ஜான் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சுஸ்மாவை ஒரு நல்ல கம்பேக்கில் பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் நச்சரித்து சோஷியல் மீடியாவில் அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் சுஸ்மா திருமணத்துக்குப் பிறகு அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு செம ரொமாண்டிக்காக இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாயகி தொடருக்கு பின் சின்னத்திரையில் பெரிய அளவில் தோன்றாத சுஸ்மா, சமீபத்தில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார். இது அவருக்கு நல்ல கம்பேக்காக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.