ஒரே நாளில் சசிகுமாரின் இரு படங்கள் வெளியீடு
ADDED : 1437 days ago
நடிகர் சசிகுமார் கைவசம் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, எம்.ஜி.ஆர் மகன், நா நா, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. இதில், சில படங்களின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. அந்த வகையில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவான ‛கொம்பு வச்ச சிங்கம்டா' திரைப்படம் நவம்பர் 26ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‛ராஜவம்சம்' திரைப்படமும் நவம்பர் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சசிகுமாருடன் நிக்கி கல்ரானி, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சித்தார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரே நாளில் சசிகுமாரின் இருபடங்கள் வெளியாவதால் தயாரிப்பாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.