உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமெடி நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி!

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி!

தற்போது தமிழில் பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வரும் அஞ்சலி, ராம்சரணை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஷங்கர் இயக்கும் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தநிலையில் தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்ற நடிகர் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் கமிட்டாகியுள்ளார் அஞ்சலி. கருணா குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மலையாளத்தில் வெளியான நயாட்டு என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !