நடிகர் ரஜினி 'டிஸ்சார்ஜ்'
ADDED : 1436 days ago
சென்னை:மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று இரவு வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிக்கு, மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. விருது பெற்ற பின், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்த ரஜினி, சென்னை திரும்பினார்.பின், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். இதையடுத்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், அங்கு சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர்
பாலகிருஷ்ணனை சந்தித்து நலம் விசாரித்தார்.