சங்கராந்திக்கு ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் மோதல் - ராஜமவுலி வெளியிட்ட பரபரப்பு தகவல்
ADDED : 1436 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்-ராம் சரண் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் சங்கராந்தியை முன்னிட்டு வருகிற ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. அதேபோல் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கான மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், சங்கராந்திக்கு ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்கள் மோதுவதால் வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நான்கு படங்கள் ஒன்றாக வந்தாலும் படங்கள் நன்றாக இருந்தால் மக்கள் அனைத்து படங்களையுமே பார்க்க வருவார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
சங்கராந்திக்கு இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி இன்னும் சில படங்களும் வெளியாக உள்ளன. எல்லா படங்களுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்று நம்புகிறேன். என் படம் மட்டுமே ஓட வேண்டும், மற்ற படங்கள் ஓடக்கூடாது என்று சொல்லும் நேரம் இதுவல்ல. அனைவருமே ஒன்றிணைந்து பணம் சம்பாதித்தாக வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார் ராஜமவுலி.