உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தூய்மை, நேர்மை - நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்

தூய்மை, நேர்மை - நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் இறங்கினார்கள். தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் தடை போட்டிருந்தார்.

ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !