குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
பெரிய திரையில் நல்ல கதையுடன் வெளியாகும் படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதில் தவறுவதில்லையோ, அதேபோல ஓடிடியில் வெளியாகும் படங்களைக் காத்திருந்து பார்ப்பதற்கும் இங்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த வரிசையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்ற 'சிறை' உள்ளிட்ட பல படங்கள் இந்த வாரா பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிறை
புதுமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி ஹிட் ஆனா திரைப்படம் 'சிறை'. 1998 காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் கதை எழுதியிருந்தார். இந்த திரைப்படம் நாளை(ஜன.23) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மார்க்
கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் திரைப்படம் 'மார்க்'. இந்த படம் நாளை(ஜன.23ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
ரெட்ட தல
இயக்குநர் கிரிஷ் திருகுமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ரெட்ட தல'. ஆக்சன் கதையுடன் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் கடந்த 21ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
45
கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் '45'. கன்னட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(ஜன.23ம் தேதி) வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein)
ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'ராஞ்ஜனா, அட்ராங்கிரே' படங்களுக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. அவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ள இந்த படம் 160 கோடி வசூலித்து வரவேற்பை பெற்றது. நாளை (ஜன.,23) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Cheekatilo
தெலுங்கு இயக்குநர் ஷரன் கோபிஷெட்டி இயக்கத்தில், நடிகை சோபிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'Cheekatilo'. கிரைம் த்ரில்லர் கதையுடன் வெளிவந்த வந்த இந்த திரைப்படம் நாளை(ஜன.23ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Sandhya nama upasate
தெலுங்கு இயக்குநர் ப்ரோ பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Sandhya nama upasate'. இந்த படம் இன்று(ஜன.22ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Aadi shambhala
தெலுங்கு இயக்குநர் உகந்தார் முனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'Aadi shambhala'. தெலுங்கு நடிகர் ஆடி சாய்குமார், அர்ச்சனா ஐயர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று(ஜன.22ம் தேதி) வெளியாகியுள்ளது.