உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த டாக்டர்

ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டாக்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அவரது முந்தைய படம் போலவே பிளாக் காமெடி வகையில் உருவானது.

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரோனா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியாகும் என்று படக்குழு உறுதியாக இருந்தது. அதன்படி கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தை குடும்ப குடும்பமாக பார்த்து வருகின்றனர்.

50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் சாதனை செய்து வருகிறது. படம் வெளியான 25 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டாக்டர் படம் முன்னணி தொலைக்காட்சி சேனலில் வரும் தீபாவளி அன்று ஒளிபரப்ப்பட இருப்பது குறிப்பித்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !