உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிக்கு டப்பிங் பேசிய சாய்குமார்

ரஜினிக்கு டப்பிங் பேசிய சாய்குமார்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் அண்ணாத்த. நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த பத்தின் டிரெய்லர், பாடல்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திம் கன்னட மொழி பதிப்பும் வெளியாகவிருக்கிறது.

இந்தநிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் கன்னட மொழி பதிப்புக்கு ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் சாய் குமார் குரல் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. நடிகர் சாய் குமார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு குரல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நடிப்பில் பிசியாகிவிட, பாடகர் மனோ தான் ரஜினிக்கு தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வந்தார். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கன்னட பதிப்புக்கு சாய் குமார் டப்பிங் கொடுக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !