உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளி அன்று டிவி மூலம் ரசிகர்களை சந்திக்கும் வடிவேலு

தீபாவளி அன்று டிவி மூலம் ரசிகர்களை சந்திக்கும் வடிவேலு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான மீண்டும் நடிக்க வந்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். அடுத்து உதயநிதி மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் பத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று டிவி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார். வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !