கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை திரிஷா
ADDED : 1475 days ago
ஐக்கிய அமீரக அரசு இந்திய திரைப்பிரபலங்களுக்கு அவர்கள் நாட்டிற்கு வந்து செல்லும் சிறப்பு விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. பாலிவுட்டை தொடர்ந்து சமீபகாலமாக மலையாள திரையுலகினர் இந்த விசாவை அதிகம் பெற்று வந்தனர். இப்போது நடிகை திரிஷாவுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இதை பெற்றுக் கொண்ட திரிஷா இன்ஸ்டாவில் ‛‛ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.
நடிகை திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.