லிகர் - மைக் டைசனின் போஸ்டர் வெளியீடு
ADDED : 1432 days ago
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் லிகர். இந்தப் படத்தை பூரி ஜெகன்னாத், கரண் ஜோகர், அபூர்வா மேத்தா, சார்மி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய படத்தில் அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மைக் டைசன் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டர் ஒன்றை லிகர் படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தனது டிரேட்மார்க் ஆக்ரோஷத்துடன் எதிரியை தாக்கும் காட்சியை போன்ஸ் போஸ் கொடுத்துள்ளார் டைசன். இப்படம் படம் தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.