உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய்சேதுபதி அஞ்சலி

புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய்சேதுபதி அஞ்சலி

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த 29ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு தமிழ் திரையுலகமும் அஞ்சலி செலுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் நேற்று நடிகர் விஜய்சேதுபதி புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பெங்களூருவில் நடந்து வரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர் புனித் ராஜ்குமார் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நானும் அவரும் (புனித்) போனில்தான் பேசி இருக்கிறோம். என்னுடைய படங்களை பார்த்து விட்டு பாராட்டி இருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட நேரில் சந்திக்கவில்லை. அது இப்போது வருத்தமாக இருக்கிறது. அவரது படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவரோடு பழகாமல் போய்விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. பார்க்காத எனக்கே இவ்வளவு வருத்தமாக இருக்கும்போது அவரது குடும்பத்திரை நினைத்து பார்க்கவே முடியவில்லை. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !