உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகிறது அரண்மனை 3

ஓடிடியில் வெளியாகிறது அரண்மனை 3

கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான படம் அரண்மனை 3. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. சத்யா இசை அமைத்திருந்தார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அரண்மனை முதல், இரண்டாம் பாகம் போன்று இதுவும் காமெடி பேய்படம்தான். இந்த படம் வருகிற 12ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் படங்களை தொடர்ந்து இந்த படத்தை வெளியிடுகிறது ஜீ5 நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !