சாதனை படமா 181
                                ADDED :  1455 days ago     
                            
                             உலக சினிமாவில் புது முயற்சியாக, இயக்குனுனர் இசாக், 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி, படமாக்கப்பட்டுள்ள படத்திற்கு, ‛181' என பெயரிட்டுள்ளார்.  இசாக் கூறுகையில், ‛திகில் படம் என்றாலும், இது பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் நோக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதையை எழுதியுள்ளேன்' என்றார். 
புதுமுகங்கள், ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய்சந்துரு உள்ளிட்ட பலர் நடிக்க, ஷமீல்.ஜே இசையமைத்துள்ளார். படத்தின் முதல் போஸ்டரை தீபாவளியன்று நடிகர் ஆரி வெளியிட்டார்.