புது வீடு வாங்கிய யாஷிகா ஆனந்த்
ADDED : 1430 days ago
நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு பகுதியில் ஆபேரஷன் செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்த இவர் இப்போது மெல்ல நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வாங்கி உள்ள புதிய வீட்டிற்கு அவர் சென்று விட்டார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக கூறி புதிய வீட்டின் கிரஹபிரவேச வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவரது தங்கை ஒசைன் ஆனந்த் பூஜை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.