உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மழை, வெள்ளம் - இயக்குனரின் மீம் பதிவு

மழை, வெள்ளம் - இயக்குனரின் மீம் பதிவு

விஷால் நடித்த இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தை இயக்கினார். அடுத்து கார்த்தி நடிப்பில் சர்தார் படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை நகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது என்று மக்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான பாரசைட்டில் வரும் ஒரு காட்சியை மீமாக டுவீட் செய்திருக்கிறார் பி.எஸ். மித்ரன். அதாவது மழை பெய்ததால் காற்று மாசு குறைந்ததாக பணக்காரர்கள் சந்தோஷப்பட, ஏழை மக்களோ வீட்டிற்குள் நீர் புகுந்த கவலையில் இருப்பதை அந்த மீம் காட்டியிருக்கிறது. இந்த மீமுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !