உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோவாக களமிறங்கும் வில்லனின் மகன்

ஹீரோவாக களமிறங்கும் வில்லனின் மகன்

நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக அறிமுகமாகும் வரிசையில் தற்போது அறிமுக ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் வில்லன் நடிகர் பாபு ஆண்டனியின் மகன் ஆர்தர் பாபு ஆண்டனி. எண்பது, தொன்னூறுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் தான் பாபு ஆண்டனி. ஆனால் கடந்த சில வருடங்களாக விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் புதிய முகம் காட்டி வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் இவரது மகன் ஆர்தர், 'தி கிரேட் எஸ்கேப்' என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் ஜே.எல் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. பாபு ஆண்டனியை போலவே அவரது மகனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் அவர் அறிமுகமாகும் முதல் படமே ஆக்சன் படமாக தயாராகி உள்ளதாம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !