ஜோசப் ஹிந்தி ரீமேக்கில் சன்னி தியோல்
ADDED : 1421 days ago
கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் ஜோசப். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நூறு நாட்கள் ஓடி கோடிகளில் வசூலை வாரி குவித்தது. எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதை என்பதால், இந்தப்படம் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என்பவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் ஆர்கே சுரேஷும் தெலுங்கில் டாக்டர் ராஜசேகரும் நடித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்தப்படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. இதில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இந்தப்படத்தை இயக்கியுள்ள பத்மகுமார் தான் மூன்றாவது முறையாக ஹிந்தியிலும் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.