சமந்தாவுக்கு கிடைத்த புது அங்கீகாரம்
ADDED : 1394 days ago
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கணவர் நாகசைதன்யா உடன் ஏற்பட்ட திருமண முறிவு குறித்த சமந்தா அதிகம் பேசப்பட்டாலும்.. அவரது திரையுலக பயணத்தில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் நடித்து வெளியான பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைவதற்கான சிகப்பு கம்பளத்தை விரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, வரும் நவ- 20-28 முதல் கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். இத்தனை வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய அளவில் இப்படி சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் முதல் நடிகை சமந்தா தானாம்..