உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள திரையுலகில் நுழைந்த சிவாஜியின் பேரன்

மலையாள திரையுலகில் நுழைந்த சிவாஜியின் பேரன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்தமகன் ராம்குமாரின் வாரிசு தான் துஷ்யந்த். கடந்த 2003லேயே ஹீரோவாக அறிமுகமான இவர் சக்சஸ், மச்சி என இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். அவை சரியான வரவேற்பு பெறாத நிலையில் சில வருடங்கள் கழித்து தயாரிப்பாளராக மாறி ஒன்றிரண்டு படங்களை தயாரித்தார். இந்தநிலையில் தற்போது அஸ்த்ரா என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார் துஷ்யந்த்.

“நீண்ட நாட்கள் கழித்து நடிப்புக்கு திரும்புவதால் மலையாள திரையுலகில் கால் வைப்பதுதான் சரி என தோன்றியது.. காரணம் அங்கே வில்லனாக நடித்தாலும் இரண்டு காட்சிகளில் வந்துபோகும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் பேசவைத்து விடுவார்கள். அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை எளிதாக கைப்பற்ற முடியும்.. அந்தவகையில் அவர்கள் சொன்ன கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டேன்” என்கிறார் துஷ்யந்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !