உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் - சூர்யா சந்திப்பு

நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் - சூர்யா சந்திப்பு

முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ஹீரோக்கள் ஒன்றாக சந்தித்துக் கொள்வது ரொம்பவே அரிதான விஷயம். ஏதாவது பிரபலங்களின் திருமணம் என்றால் கூட தனித்தனி நேரங்களில் தான் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நடிகர்கள் விஜய்யும், சூர்யாவும் நீண்ட காலம் கழித்து நேற்று சந்தித்துள்ளனர்.

பெருங்குடியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அடுத்தடுத்த அரங்குகளில் விஜய் நடிக்கும் பீஸ்ட் மற்றும் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவை இரண்டுமே ஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படங்கள் தான். அந்தவகையில் நேற்று படப்பிடிப்புக்காக வந்த சூர்யாவும், விஜய்யும் நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேசிக் கொண்டனர். அந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யா நடிகராக அறிமுகமானதே விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் தான். பிறகு இருவரும் இணைந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்தனர். சூர்யா நடித்த ஆதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் கலந்து கொண்டார். அதன்பின் ஓரிரு விருது விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் இருவரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !