புஷ்பாவில் வில்லியான நிகழ்ச்சி தொகுப்பாளர்
ADDED : 1422 days ago
தமிழ்நாட்டில் டிடி போன்று ஆந்திராவில் நட்சத்திர தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர் அனஷ்யா. 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகார்ஜுனா நடித்த சொகடே சின்னி நயனா என்ற படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு கஷ்ணம் என்ற படத்திற்காக பல விருதுகளை பெற்றார். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் பீஷ்ம பருவம் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகும் புஷ்பா படத்தில் தாட்ஷாயினி என்ற கேரக்டரில் வில்லியாக நடிக்கிறார். அவரது தோற்றத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், தனஞ்செயா, சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள்.