உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பண்ணை வீட்டில் சூதாட்டம்: தெலுங்கு நடிகர் நாக சவுர்யா தந்தை கைது

பண்ணை வீட்டில் சூதாட்டம்: தெலுங்கு நடிகர் நாக சவுர்யா தந்தை கைது

பிரபல தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவின் தந்தை சிவலிங்க பிரசாத். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் ஐதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவு பகுதியில் ஒரு பண்ணை வீட்டை படப்பிடிப்புக்காக என்று சொல்லி குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்தாமல் சூதாட்டம் நடத்த பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவலிங்க பிரசாத், குத்தகை நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பண்ணை வீட்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி போலீஸார் சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீராம் பத்ரய்யா உள்பட 30 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !