சத்யா 2-வில் இணைந்த சினிமா டான்சர்
ADDED : 1471 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றாக இருப்பது சத்யா. விஷ்ணு மற்றும் ஆயிஷா இருவரும் இணைந்து நடித்துவரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சத்யா தொடரின் சீசன் 1 சமீபத்தில் நிறைவடைந்தது. அதன் பிறகு அதே கதையின் தொடர்ச்சியாக சில புதிய கதாபாத்திரங்களுடன் இந்த தொடரின் இரண்டாவது சீசன் சத்யா 2 என ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடரில் பிரபல நடன கலைஞரும், சீரியல் நடிகையுமான ஹேமதயாள் இணைந்துள்ளார். ஹேமதயாள் நடித்த எபிசோடுகள் தற்போது ஒளிப்பரப்பாகி வரு இறக் இதனையடுத்து ஹேமாவின் ரசிகர்கள் சத்யா 2 சீரியலை ஷெட்யூல் போட்டு பார்த்து வருகின்றனர்.