அண்ணாத்த ரூ.200 கோடி வசூல் உண்மையா?
ADDED : 1423 days ago
சிவா இயக்கத்தில் உருவாகி தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்த்திருந்தனர். படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக வெளிவந்தாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படம் முதல் 2 - 3 நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டியதாக கூறப்பட்டது. தற்போது வெளியான 7 நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை நிகழ்த்தியுள்ளதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர்.
இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.