உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகிறது தெலுங்கு த்ரிஷ்யம் 2

ஓடிடியில் வெளியாகிறது தெலுங்கு த்ரிஷ்யம் 2

மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. வெங்கடேஷ், மீனா நடித்திருந்தார்கள். இங்கும் வெற்றி பெற்றது. தற்போது த்ரிஷ்யம் 2வும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ், மீனாவுடன் கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவருவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். சுரேஷ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி இணைந்து தயாரித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !