மலையாள நடிகை திவ்யா கோபிநாத் திருமணம்: பதிவு அலுவலகத்தில் எளிமையாக நடந்தது
ADDED : 1419 days ago
2016ம் ஆண்டு வெளியான கம்மட்டிபாடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா கோபிநாத். அதன்பிறகு அஞ்சாம் பத்ரா, ரக்ஷ சாக்ஷியம், ஆயாள் சசி, வைரஸ் உள்பட பல படங்களில் நடித்தார். ஆபஹாசம் என்ற படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய ஜூபித் நம்ரத்தை காதலித்தார். இப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் உள்ள அலங்காடு கொங்கொர்பில்லியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மலையாள திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.