மஹத் நடிப்பில் உருவாகும் 2030
ADDED : 1523 days ago
நடிகர் மஹத் ராகவேந்திரா, நடிகை ஸ்வாதி நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2030. தற்போதைய நோய் தோற்று பொதுமுடக்கத்தையும் அதன் பின்னணியில் கார்ப்பரேட் மருத்துவதுறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் கருவை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. ஆன்-ஸ்கை டெக்னாலஜி நிறுவனம் சார்பில் முத்து சம்பந்தம் தயாரித்துள்ளார். 2020ல் துவங்கி 2030ல் கதை முடிவடையும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தரும் என்கின்றனர் படக்குழுவினர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. தமிழுக்கு முற்றிலும் புதிதான ப்ளாஷ் பார்வேர்ட் முறையில், கதை சொல்லும் வகையில் அதிலும் டைம் டிராவல் சம்பந்தப்படாமல் இந்த வகையில் கதை சொல்லும் முதல் படைப்பாக இருக்கும் என்கிறார்கள்.