உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிஷேக் பச்சன் கழற்றி விடப்பட்டது ஏன் ?

அபிஷேக் பச்சன் கழற்றி விடப்பட்டது ஏன் ?

கடந்த 2005ல் ஹிந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பண்டி அவுர் பப்ளி. 15 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த அபிஷேக் பச்சனுக்கு பதிலாக இந்த இரண்டாவது பாகத்தில் சைப் அலிகான் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த ஹீரோ மாற்றத்திற்கு காரணம் என்று பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே படத்தின் தயாரிப்பாளர் தூம் 3 படத்தை தயாரித்தபோது அதில் நடிப்பது தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது தற்போது வரை தீராததால் இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் அபிஷேக் பச்சனுக்கு பதிலாக சைப்பை மாற்றச் சொல்லி விட்டாராம் பட தயாரிப்பாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !