நவம்பர் 18ல் மாநாடு, டிரைலர் - பாடல் வெளியீடு!
ADDED : 1526 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கருணாகரன் பலர் நடித்துள்ள படம் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 18ஆம் தேதி அன்று மாநாடு படத்தின் 2வது டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.