மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1388 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1388 days ago
டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் டான். இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன், நவீன் பொலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குசினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர் 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
1388 days ago
1388 days ago