மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1388 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1388 days ago
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக அறிமுகமான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதையடுத்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'கலகலப்பு 2', 'ஹர ஹர மஹாதேவகி' போன்ற படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ராஜவம்சம், இடியட் என 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.
இந்நிலையில் நிக்கி கல்ராணி அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவுக்கு வந்து பற்றி கூறியிருப்பதாவது : உண்மையைச் சொல்லணும்னா, நான் அப்படியே ஒரு ப்ளோவுல சினிமாவுக்குள்ள வந்தேன். அதைப் பண்ணணும், இதைப் பண்ணணும்னு எதையும் அதிகமா யோசிக்கலை. நான் இவ்வளவு பண்ணினதே சந்தோஷமா இருக்கு. ஆனா, இன்னும் நிறைய பண்ணணும்னு ஆசையாவும் இருக்கு. சின்ன வயசுல இருந்து நான் டாக்டராகணும்னு அம்மா என்கிட்ட சொல்லிச் சொல்லி எனக்கும் ஆசை வந்திடுச்சு. ஆனா, பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் பார்த்த பிறகுதான், இது நமக்கு செட்டாகாதுன்னு புரிஞ்சது. அப்புறம், மாடலிங், சினிமான்னு வந்துட்டேன். ஹீரோயினாகணும்னு எப்போவும் நான் நினைத்ததில்லை. அது நடந்திடுச்சு'' என்றார்.
1388 days ago
1388 days ago