விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது
ADDED : 1503 days ago
விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் தயாரித்து, நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபட்ட நிலையில் இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. கூடிய சீக்கிரமே விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முதல் விக்ரம் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. கோவையில் ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதோடு விக்ரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.