உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான்கானுக்கு மகாராஷ்டிரா அரசு அழைப்பு

சல்மான்கானுக்கு மகாராஷ்டிரா அரசு அழைப்பு

அரசாங்கம் செயல்படுத்தும் சில நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது நிச்சயம் திரையுலக நட்சத்திரங்களினால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்தவகையில் மகாராஷ்டிரா அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் ஊக்கப்படுத்துவதற்காக தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த மாநில அரசு முயற்சித்தாலும் கூட சில பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சல்மான்கானை இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாராம் செய்ய அழைப்பு விடுத்துள்ளதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !