பெண்மையை போற்றுவோம் - வைரலான நீலிமா போட்டோஷூட்
ADDED : 1436 days ago
பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும், சீரியல்களில் நாயகியாகவும் நடித்தவர் நீலிமா ராணி. தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நடிகை நீலிமா பெண்மையை போற்றும் வகையில், கர்ப்பிணியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அவர் கூறுகையில், 'அவள், தாய் மட்டுமல்ல; படைப்பாளி, அன்பின் துாய்மையான வடிவம், தெய்வம்' எனக்கூறியுள்ளார். நீலிமா இசையின் படங்கள் இணையத்தில் அவை வரவேற்பை பெற்று வருகிறது.