பிரம்மாண்ட செட்டில் ராம்சரண் - கியாரா அத்வானி நடனம்
ADDED : 1426 days ago
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தமனின் இசையில் உருவான டூயட் பாடல் ஒன்று தற்போது படமாக்கப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் நடன காட்சிகளை அமைக்கும் இந்த பாடலுக்கு ராம்சரண், கியாரா அத்வானிக்கு நடன ஆடுகின்றனர். ஷங்கரின் முந்தைய படங்களில் இடம் பெற்றது போன்று பிரமாண்டமான செட்டில் இந்த பாடல் காட்சி படமாக்கப்படுவதோடு, ஏராளமான துணை நடிகர்களும் நடனமாட உள்ளனர்.