டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலித்த இளையராஜா
ADDED : 1426 days ago
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா. இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவரது பாடல்கள் ஸ்பாட்டிபை என்ற ஆப்பில் கிடைக்கிறது. இதுதொடர்பான விளம்பரங்களிலும் இளையராஜா தோன்றி உள்ளார்.
இந்நிலையில் முதன்முறையாக இளையராஜாவின் பேனர் அடங்கிய வீடியோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தின் உயரமான கட்டட திரையில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது. இதை இளையராஜாவின் உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.