உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடகை தாய் மூலம் இரு குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா

வாடகை தாய் மூலம் இரு குழந்தைக்கு தாயான பிரீத்தி ஜிந்தா

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து, திருமணம் கொண்டார். தொடர்ந்து படங்கள் மற்றும் ஐபிஎல்., போட்டிகளில் தன்னை முன்னிலைப்படுத்தி வந்தார். 46 வயதை கடந்த பிரீத்தி, வாடகை தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். குழந்தைகளுக்கு ஜிந்தா, ஜியா என பெயரிட்டுள்ளார்.

‛‛எங்கள் வாழ்வில் புதிய கட்டம். குழந்தைகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். நானும் கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம்'' என தெரிவித்துள்ளார் பிரீத்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !