மார்ச்சில் வருகிறார் விக்ரம்
ADDED : 1458 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக் ஷன் படமான விக்ரம்-ல் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இவருடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில், காளிதாஸ் ஜெயராம், சம்பத் ராம், மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது கோவையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது. அதன்பின் மற்ற பணிகளை துவக்கி மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.