உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ்: ரீ என்ட்ரி கொடுத்த அபிஷேக்! அதிர்ந்து போன போட்டியாளர்கள்

பிக்பாஸ்: ரீ என்ட்ரி கொடுத்த அபிஷேக்! அதிர்ந்து போன போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வருகை தந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திலேயே அபிஷேக் வெளியேற்றப்பட்டார். அபிஷேக்கின் செயல்களால் அவர் பிக்பாஸ் வீட்டில் விஷப்பூச்சி என்றே அழைக்கப்பட்டார். அபிஷேக் சென்றபின்பு சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகிய போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இந்த கால இடைவெளியில் அபிஷேக் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று உள்ளே இருந்தபோதும், அதன் பிறகு வெளியே சென்ற பின்பும் உன்னிப்பாக கவனித்து வைத்திருப்பார். இந்நிலையில் மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக நுழைந்திருப்பது மற்ற போட்டியாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார லட்சுரி பட்ஜெட்டிற்கு தேவையான பொருட்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அபிஷேக் ராஜா வருகை தந்தது சக போட்டியாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !