'வலிமை' வில்லன் கார்த்திகேயா திருமணம்
ADDED : 1413 days ago
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திகேயா. வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் இவர்தான் வில்லன்.
கார்த்திகேயா அவருடைய நீண்ட நாள் தோழியான லோகிதா ரெட்டியை இன்று காலை ஐதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு வாரங்கல்லில் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. தனது நிச்சயதார்த்தம் பற்றி அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் கார்த்திகேயா வெளியிட்டிருந்தார்.
இன்று நடைபெற்ற திருமணத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 'வலிமை' பட நாயகன் அஜித் கலந்து கொண்டது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.
'வலிமை' படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.